மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்..!

0
106

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்கள் கணவன் தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தான் நினைப்பார்கள்.

மற்ற உறவுகளிடம் மனைவியை விட்டுக்கொடுக்காத, துரோகம் செய்யாத கணவன் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விடவும் அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்கவே முடியாது.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவிக்கு கனவில் கூட துரோகம் நினைக்க மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அப்படி ஒருபோதும் மனைவியை ஏமாற்றாத ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் –
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியான சுக்கிரனால் ஆளப்படுவதன் காரணமாக இவர்களுக்கு இயல்பாகவே காதல் விடயத்தில் அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் இயல்பாகவே நேர்மையானவர்களாகவும் அதிக விசுவாச குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். காதல் விடயத்தில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியான குணம் கொண்ட இவர்கள் மனைவிக்கு எந்த சூழ்நிலையிலும் துரோகம் செய்வதே கிடையாது.

கடகம் –
கடக ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பிலேயே அன்பானவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் துணைக்கு எல்லா விடங்களிலும் முழுமையான மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்க்கைத்துணையை உண்மையாக நேசிப்பதில் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்களின் அனைத்து விடயங்களையும் துணையுடன் பகிர்ந்துக்கொள்கின்றனர். இவர்கள் மனைவிக்கு எல்லா வகையிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துக்கொள்வார்கள்.

துலாம் –
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் திருமண உறவுன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனைவிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதுடன் எப்போதும் மனைவியை ராணி போல பார்த்துக் கொள்ள நினைப்பார்கள். இந்த ராசி ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இவர்கள் ஒருபோதும் மனைவியை ஏமாற்ற மாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here