யாழில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்..!

0
155

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான வேட்பாளரே செந்திவேல் தமிழினியன் வயது-33 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த வேட்பாளரின் மறைவிற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here