பேரூந்து – முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து.. இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
95

மொனராகலை மெதகம வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக மெதகம நகருக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here