முச்சக்கரவண்டி – கயஸ் வாகனம் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.!

0
157

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் அந்தரவெவ சந்திக்கருகில் இன்று (24) முச்சக்கர வண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி சாரதியான நொச்சியாகமயைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.சுமித் ரத்நாயக்க என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது மகளையும் மகனையும் மகளின் தோழி ஒருவரையும் தமது முச்சக்கர வண்டியில் அவர்கள் கல்வி கற்கும் புலங்குளம மகா வித்தியாலயத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் தனக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை நோக்கி திருப்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் முச்சக்கரவண்டி மோதுவதை தவிர்த்து முன்னால் செல்ல முற்பட்டபோது முன்னால் வந்த வேன் மீது மோதி விபத்துள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here