உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழப்பு.!

0
135

செல்லகதிர்காமம் தம்பே பிரதேசத்தில் இன்று மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்லகதிர்காமம் தனமல்வில வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய திஸாநாயக்க ஆராச்சிகே சதுர நிரோத என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிச் செல்லப்பட்ட பெரிய உழவு இயந்திரத்தின் இடது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சக்கரத்தை கழற்றி ஜெக்கை வைத்து சக்கரத்தை மற்றும் வேளையில் ஜெக் விலகி உழவு இயந்திரம் சாரதியின் மேல் கவிழ்ந்துள்ளது.

குறித்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here