ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு..!

0
136

ஹபராதுவ மிஹிபென்ன ரயில் கடவைக்கு அருகில் மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி நேற்று (24) இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.

தல்பே, மரதானகே வத்த பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி தற்போது காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, பேராதனை ரஜவத்தை பல்கலைக்கழக கூட்டுறவு சங்கத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கண்டி, ஒகஸ்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here