14 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – சிக்கிய தேரர்..!

0
89

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் 40 வயதுடைய தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி ஒருவர் விகாரையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் விகாரையில் இருந்த தேரர் போட்டி நிகழ்வு ஒன்றிற்கு சிறுமியை தெரிவு செய்து பயிற்சி அளிப்பதற்காக சிறுமியை தனது அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது தேரர் சிறுமிக்கு இனிப்புப் பண்டங்களை கொடுத்து ஏமாற்றி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர், சிறுவர் காப்பகத்தின் உரிமையாளர் சிறுமியின் கையில் பல்வேறு பொருட்கள் காணப்படுவதை அவதானித்துள்ள நிலையில் இது தொடர்பில் சிறுமியின் பெற்றோரிடம் அறிவித்துள்ளார்.

இதன்போது இந்த சிறுமி தனக்கு நேர்ந்த விடயத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here