அமெரிக்கா “கிரீன் கார்டு” லாட்டரி.. என்னும் 10 நாட்களே இருக்கின்றன.. உடனே விண்ணப்பியுங்கள்..!

0
65

அமெரிக்கா “கிரீன் கார்டு” லாட்டரிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது.

அமெரிக்காவின் “கிரீன் கார்டு” லாட்டரி எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா லாட்டரி திட்டம் தொடங்கும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த திட்டம் அக்டோபர் 2 ஆம் திகதி மதியம் 12.00 மணி முதல் (உள்ளூர் நேரம் இரவு 9.30 மணி) ஆன்லைன் பதிவுக்காக திறந்திருக்கும் மற்றும் நவம்பர் 5, 2024 (உள்ளூர் நேரம் இரவு 10.30 மணி) வரை பதிவு செய்யலாம்.

“கிரீன் கார்டு” லாட்டரி பன்முகத்தன்மை விசா (DV) திட்டம் 1990 இன் குடியேற்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது,

மேலும் 1995 நிதியாண்டில் தொடங்கி, 55,000 புலம்பெயர்ந்த விசாக்கள் வருடாந்திர லாட்டரியில் வழங்கப்படும்.

இந்த லாட்டரியானது அமெரிக்காவின் புலம்பெயர்ந்த மக்களைப் பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு குறைந்த குடியேற்ற விகிதத்தைக் கொண்ட நாடுகளில் இருந்து விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

மேலும் “கிரீன் கார்டு” லாட்டரிக்கு விண்ணப்பிப்போர் https://dvprogram.state.gov/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த “கிரீன் கார்டு” லாட்டரி ஊடாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையர்கள் பலர் அமெரிக்கா சென்று குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டம் முடிய எனும் 10 நாட்களே இருக்கின்றன. ஆகவே என்னும் நீங்கள் விண்ணப்பிக்க வில்லையா..? நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here