இலங்கையில் மகிந்தவுக்கு ஐந்து வகையான ஓய்வூதியங்களாம்..!

0
70

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நான்கு அல்லது ஐந்து ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றது என தேசிய மக்கள் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் உபுல் குமாரப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார்

மாத்தறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு மூன்று வாக்குறுதிகளை வழங்கினார்.

அதாவது நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றி, நாட்டை நிலையான அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்வது, அரசியல்வாதிகள் கொள்ளையடித்த செல்வத்தை மீட்பது, திருடர்களுக்கு தண்டனை வழங்குவது.

அடுத்த 5 வருடங்களில் இந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அரசாங்கத்தை வழிநடத்துவோம்.

அநுர ஜனாதிபதியாகி ஒரு வாரத்திற்குள் நூற்றைம்பது வாகனங்கள் கையளிக்கப்பட்டு விட்டன. சட்டம் நியாயமாகப் பயன்படுத்தப்படும்போது, ​​அது அனைவரையும் சமமாகப் பாதிக்கும். ஆனால் இன்னும் சில விஷயங்களை மாற்ற முடியவில்லை, நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவுக்கு நான்கு அல்லது ஐந்து ஓய்வூதியங்கள் உள்ளன.

அரச ஊழியர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுகிறார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் சிறப்புரிமைகள் பறிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு கொழும்பு 07 இல் சொந்தமாக வீடொன்றும், அந்த வீட்டிற்கான பணியாளர்களும் உள்ளனர். காவலர்கள் வழங்கப்படுகின்றனர்.

நாட்டின் அபிவிருத்தியை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு பெரும்பான்மை பலத்துடன் கூடிய பலமான நாடாளுமன்றம் தமது கட்சிக்கு தேவை.

அதற்காக அரசியலமைப்பை புரிந்து கொண்டவர்கள் குழுவொன்று இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here