கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
156

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பணிபுரிந்து வந்த இளம் குடும்பஸ்தர் மரத்தில் இருந்து தவறிவிழ்ந்து உயிரிழந்துள்ளார் .

யாழ் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரத்தில் இருந்து தவறி விழ்ந்து படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் .

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் காளிதாஸ் வயது 36 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here