தனது வளர்ப்பு நாய், சமையல் காரர்கள் போன்றோருக்கு சொத்தை எழுதி வைத்த ரத்தன் டாடா.!

0
94

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார்.

இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். குறித்த வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும்.

அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. எனினும், இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள சொத்தில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததையடுத்து புதிதாக தத்தெடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

இந்நிலையில் டிட்டோ என்ற வளர்ப்பு நாயை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க ரத்தன் டாடா சொத்து எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியவந்த வண்ணம் உள்ளன. மற்றும் தனது மனதுக்கு நெருக்கமான உதவியாளர் சாந்தனு, சமையல் கலைஞர் ராஜன் ஷா, மற்றும் சமையல் உதவியாளர் சுப்பையா ஆகியோருக்கும் உயில் எழுதியுள்ளார் என செய்திகளை வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here