தமிழ்க் கட்சிகளுக்கு ஏன் இந்த நிலைமை – அமெரிக்கத் தூதுவர்.!

0
84

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? இவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா.”

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் (24) நடைபெற்ற சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி மற்றும் 13 ஆவது திருத்தம் போன்ற விடயங்களால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரியவேண்டி வந்தது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமாக இருந்து வருகின்றோம். ஆனால், மற்றக் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன என்பது எங்களுக்கும் விளங்கவில்லை.

கொள்கையளவில் இவர்களுக்கிடையில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை அவர்களிடத்தேதான் நேரடியாகக் கேட்க வேண்டும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here