கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பம்.!

0
122

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய நிதியுதவியுடன் மஹவ- ஓமந்தை புகையிரத பாதை புனரமைப்பு கருத்திட்டம் 2019.11.29 ஆம் திகதி ஆரம்பமானது. கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்காக கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு கோட்டை காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரத திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய இன்று காலை 05.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி விசேட புகையிரதம் ஒன்று புறப்படவுள்ள நிலையில் பிற்பகல்.1.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

செவ்வாய்க்கிழமை (29) காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here