முல்லைத்தீவில் காட்டு யானை தாக்கி மேலுமொருவர் உயிரிழப்பு.!

0
78

முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு இளமருதங்குளம் பகுதியில் நேற்று (28) இரவு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

நேற்றிரவு அவரின் வீட்டிலிருந்து வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு இலககாகியுள்ளார்.

சம்பவத்தில் மூன்று முறிப்பு – வீரப்பராயன் குளத்தை சேர்ந்த 68 வயதுடைய சிவஞானம் ஸ்ரீஸ்கந்தராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் காட்டு யானை தாக்கி 23 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here