ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்துரானை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவையிலிருந்து ருவன்வெல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் வலதுபுறம் உள்ள பக்க வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனரான தாய், 4 வயது சிறுவன் மற்றும் 10 சிறுமி ஆகியோர் கொனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 10 வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.