விஜய்யின் தவெக மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
42

சென்னையில் அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் வெயிலின் தாக்கம், விபத்துகள் என சில உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தன. இதில் சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்படுகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அடுத்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கி திருச்சி தவெக நிர்வாகிகள் சீனிவாசன், விஜய்கலை இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.

அதே போல் வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டில் மயக்கடமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னை கீழ்பாக்கம் சார்லஸ் உயிரிழந்தார். செஞ்சியை சேர்ந்த வசந்தகுமாரும் விபத்தில் உயிரிழந்திருந்தார். இவர்கள் 6 பேரின் உயிரிழப்பு குறித்தும் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவெக மாநாடு முடிந்து சேலம் திரும்புகையில் லட்சுமி என்பவர் விபத்தில் சிக்கி சேலம் அரசு மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தவெக மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here