இரண்டரை வருடங்களின் பின்னர் சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை.!

0
27

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிக்கு பின்னர் முதல் தடவையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 12,745.60 புள்ளிகளை பதிவு செய்துள்ளது..

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் 135.54 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.96 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here