பாடசாலை மாணவிகள் இருவர் து.ஷ்.பி.ர.யோ.க.ம் – கணித பாட ஆசிரியர் கைது.!

0
147

கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றும் ஹொரனை பகுதியில் கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

சமீப காலத்தில் ஆசியர்களால் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here