பதுளை விபத்தில் சிக்கிய பேரூந்தின் இறுதி வீடியோ..!

0
241

பதுளையில் நேற்று (1) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

23 வயதுடைய மாணவிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர், நிவிதிகல, தொலபுகமுவ, பஹலகந்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இசுரி உமயங்கனா என்ற மாணவியாவார்.

என்.எம்.பி.டி. ஹெட்டிமுல்ல என்ற உயிரிழந்த மற்றைய மாணவி, குருநாகல் உனகொலகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (1) இரவு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் உயிரிழந்த இரு மாணவிகளினதும் இறுதிக் கிரியைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற விபத்துக்குள்ளான பேருந்து அதிவேகமாக பயணிக்கும் காட்சி கார் ஒன்றின் டேஷ் கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது சாரதி அதிவேகமாக செல்வது தெரிகின்றது. பிரேக் பிரச்சினை விபத்து இடம்பெற்றுறிருக்க கூறப்படுகிறது.

Source – FB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here