வாகன இலக்கத்தகடு விநியோகம் இடைநிறுத்தம்.!

0
51

வாகன இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத் தகடு வழங்காமை தொடர்பில் கடிதமொன்று வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

வாகன இலக்கத்தகடு வழங்கப்படும் வரை தாளில் அச்சிடப்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாகன இலக்கத்தை காட்சிப்படுத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here