நவம்பர் 04 ஆம் திகதி திங்கட் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
101

மேஷம்:
இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் கூட மிகுந்த கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறிசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடலும் மனமும் சோர்வடையும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதற்குச் சாதகமான நாள். செலவுகளுக்குத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை இருக்காது. உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிதுனம்:
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப் பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபா ரிகளால் ஏற்பட்ட இடையூறு நீங்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கடகம்:
தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அரவணைத்துச் செல்லவும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகை சந்தோஷத்துடன் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபா ரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

சிம்மம்;
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் கொள்ளாமல் இருப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்,. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.

கன்னி:
எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூ லம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந் தாலும், பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாம்:
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். கணவன் – மனைவிக் கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

விருச்சிகம்:
காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோனம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளரின் பணியையும் நீங்கள் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

தனுசு:
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் தேவையறிந்து அவருக்கு உதவுவீர்கள். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

மகரம்:
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் மிகவும் உற்சாக மான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

கும்பம்:
தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். இழுபறியாக இருந்து வந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும்.

மீனம்:
இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here