பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரானின் (iran) முக்கிய இராணுவ தளபதி ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேலுடனான (israel)போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் முக்கிய தளபதி உயிரிழந்தமை பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் கமாண்டர் ஹமித் மஜந்தரணி,(Hamid Mazandarani) என்பவரே உயிரிழந்தவராவார். அவருடன் சேர்ந்து மற்றுமொரு வீரரும் பலியானார்.
நேற்று (04) பாகிஸ்தான் (pakistan) எல்லைக்கு அருகே சக இராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆட்டோகைரோவில் (உலங்கு வானூர்தி) பறந்து சென்று பயிற்சி மேற்கொண்டபோது, அது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கமாண்டர் ஹமித் மற்றும் அவரது பைலட் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ரோட்டார் அமைப்பில் உலங்கு வானூர்தியை போன்றது ஆட்டோகைரோ. ஆனால் உலங்கு வானூர்தியைவிட சிறியதாக எளிமையாக இருக்கும். இது ஈரானில் பைலட் பயிற்சி மற்றும் எல்லை கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு பேர் பயணிக்கலாம்.