உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்.!

0
114

உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது.

2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது.

அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது.

குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம்.

அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம்.

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரஜைகள் உலகின் 44 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here