நேற்று (04) பண்டாரகம – பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பேருந்து மோதிய விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் பலத்த காயமடைந்து பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மற்றும் எஹலியகொட, மின்னான – இத்தமல்கொட வீதியில் சொமிசந்தவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்கள், உயிர் சேதங்களை குறைத்துக்கொள்ள முடியும்.
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.