சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட வரி நீடிப்பு.!

0
37

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கு 2023 நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டது.

அதன் செல்லுபடியாகும் காலம் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்தது.

இந்த நிலையில் அதனை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அந்த வரிகளை அறவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here