இந்த ராசியினர் ஆடம்பர வாழ்க்கையில் தீராத மோகம் கொண்டவர்களாம்… உங்க ராசி எப்படி.?

0
28

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமை, நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். இதனால் எப்போதும் இவர்களுக்கு இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கை மீது அதிக விருப்பம் இருக்கும். தங்களை போலவே இருக்கும் இடத்தையும் மிகவும் கவர்ச்சியாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் பெயர் போன இவர்கள் தங்களின் வருமானத்தில் அதிகளவான பணத்தை ஆடைக்கும் அழகுசாதன பொருட்களுக்குமே செலவு செய்து விடுவார்கள். எதுவும் இல்லாத நிலையிலும் கூட இவர்கள் பணக்கார தோற்றத்துடன் பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமாகவே காட்சியளிப்பார்கள்.

மீனம்
மீன ராசியினர் நெப்டியூன் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுபவர்கள். அதனால் இவர்களுக்கு கற்பனை வளம் மற்றும் கலை திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் புது புது அனுபவங்களை பெறுவதிலும் அவர்களுக்கு அலாதி இன்பம் இருக்கும்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இருப்பினும் அதிகளவான பணத்தை ஆடம்பரமான வாழ்க்கைக்காக செலவிடும் பழக்கம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் இலக்கை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த குணம் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை மீதான மோகத்தை மேலும் தூண்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here