யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு.!

0
89

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் நேற்று (05) இரவு இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது..

நேற்றிரவு தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது.

வலி தங்கமுடியாமல் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நவரத்தினம் கேதீஸ்வரன் வயது 35 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம்கையளிக்கப்பட்டுள்ளது,

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here