நவம்பர் 07 ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
63

மேஷம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்:
பல வகைகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

கடகம்:
அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர் களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:
பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.

துலாம்;
அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் அதனால் ஆதாயமும் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். அநாவசிய செலவுகள் துரத்தும் என்றாலும் செலவுகளுக்குப் பஞ்சமில்லை. மனத்தின் பலவீனங்களை மறைக்கப்பாருங்கள். பிடிவாதப் போக்கை விட்டுவிடுங்கள். தீய பழக்கங்களிலிருந்து விலகியிருங்கள். நண்பர்களிலும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். கடன் பிரச்னை குறித்துக் கவலைப்படுவீர்கள். வேண்டாத அச்சம் உள்ளூர இருக்கும்.

விருச்சிகம்:
உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதாக இருந் தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:
இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மாலையில் நீண்ட நாள்களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

மகரம்:
தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்.

கும்பம்:
எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாய மும் தருவதாக அமையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

மீனம்:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here