மேலுமொரு சொகுசு கார் சிக்கியது.!

0
40

சட்டவிரோதமாக சொகுசு கார் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதகரின் வாகன முற்றத்தில் இருந்து மற்றுமொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி கல்தென்ன ஆலயத்தின் போதகர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தக் காரைக் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு காரின் இலக்கத்தை கொண்ட மற்றுமொரு கார் இது குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, குறித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here