அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

0
106

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், இது தொடர்பில் ஆராய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்கனவே விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த குழுவினால், அஸ்வெசும கொடுப்பனவுகள் யாருக்கு கிடைத்துள்ளது, உரிய நபர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரதேச செயலகங்களிலிருந்து தகவல் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here