ஏறாவூரில் மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு.!

0
106

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை, உப்போடை பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (07) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஏ.றமீஸகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான இன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை நீதிவானின் அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here