வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மற்றும் கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய, வட மேற்கு, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.