மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது.
பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது துவிச்சக்கரவண்டியின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து காரின் சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.