வசீகரிக்கும் அழகால் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்..!

0
113

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் பார்வையிலே மற்றவர்களை ஈர்க்கும் வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள்.

இவர்களின் வெளிப்புற அழகு மட்டுமன்றி இவர்களின் குணமும் மிகவும் அழகாகவே இருக்கும்.அப்படி மற்றவர்களை அழகால் நொடியில் தன்வசப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் உடல் தோற்றத்தையும் சிறந்த ஆளுமை பண்புகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களின் தைரியம் மற்றும் சுறுசுறுப்பான ஆளுமை மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தன்மையை கொண்டிருக்கும். அவர்களின் காந்த பார்வை மற்றும் நகைச்சுவையாக குணம் அனைவரையும் எளிமையாக தன்வசப்படுத்திவிடும்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் காந்த புண்ணகையை நிச்சயம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றார்கள்.
இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றும் உடல் அழகு ,அழகிய முடி, கவர்ச்சியான முகம் மற்றும் நம்பிக்கையான பேச்சி மற்றவர்களுக்கு இவர்கள் மீது இனம் புரியாத விருப்பை தூண்டுகின்றது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள். அவர்களின் நடையும் இயல்பும் தனித்துவதானதாக இருக்கும். சுக்கிரனால் ஆளப்படும், துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களை கவரும் குணத்தையும் பேச்சையும் நிச்சயம் கொண்டிருப்பார்கள். வசீகரமான தோற்றமும், சிரித்த முகமும் பார்ப்பவர்களை காரணமின்றி கவரும் வகையில் அமைந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here