விஷ ஜந்து கடித்து ஆசிரியை உயிரிழப்பு.. நெடுங்கேணியில் சம்பவம்..!

0
41

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் உடல் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை மயங்கி விழுந்த நிலையில் நெடுங்கேணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்

அவரது உயிரிழப்பு உடலில் விசம் ஏறியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது, இரவு நேரங்களில் விச ஜந்துக்கள் ஏதாவது கடித்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here