காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்பிய இளைஞன்.. CCTV காட்சி..!

0
89

மஹியங்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை காட்டு யானை துரத்துவது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த 8ஆம் திகதி அதிகாலை மஹியங்கனை மாபாகடவெவ 20ஆவது மைல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை வீதியில் வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனர், வீதிக்கு அருகில் உள்ள கடையொன்றின் மோட்டார் சைக்கிளை வேகமாக நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் காட்டு யானை துரத்தும் போது தனது தலைக்கவசத்தை கழற்றிவிட்டு ஓடினார்.

இதன்போது காட்டு யானையின் கவனம் தலைக்கவசம் பக்கம் திரும்பியதால் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here