குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்.. நேர அட்டவணை.!

0
32

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை (14) காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகளை புதன்கிழமை (13) படகுகள் மூலம் உத்தியோகஸ்தர்கள் எடுத்து சென்று, வியாழக்கிழமை (14) வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உலங்கு வானுர்தியில் வாககெண்ணும் மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here