தலைமன்னார் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.!

0
106

மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (12) கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான ரயில் சேவையானது பின்வரும் வகையில் அமைய இருக்கின்றது.

இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையிலிருந்து – தலைமன்னார்

கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படல் பி.ப 16.15 – தலைமன்னாரினை அடைதல் பி.ப 22.15 (2024.11.12 ம் திகதியிலிருந்து)

இலக்கம் 5004 – தலைமன்னாரில் இருந்து – கொழும்பு கோட்டை

தலைமன்னாரில் இருந்து புறப்படல் மு.ப 04.15 – கொழும்பு கோட்டையினை அடைதல் மு.ப 10.15 (2024.11.13 ம் திகதியிலிருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here