பதுளை பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்.!

0
29

பதுளை – மஹியங்கனை வீதியில் 4 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நுஜித்த சில்வா நேற்று திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் காலி எல்விட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.

இந்த பஸ் விபத்து கடந்த 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது 02 மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதியின் அனுமதிப்பத்திரம், மதுபோதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதன் காரணமாக 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பின்னர், பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பஸ் சாரதியின் உடல் நிலைமையை கருத்தில் கொண்ட நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சாரதிக்கு தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here