14 வயது மாணவி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – இளைஞன் கைது..!

0
82

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக அறிந்துக்கொண்ட, அநுராதபுரம் அலையாபத்து பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியை, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி, பாடசாலைக்கு வராமல் இளைஞனொருவனுடன் சென்றுவிட்டு மறுநாள் பாடசாலைக்கு வந்ததாக அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“டிக் டொக்” செயலி ஊடாக இளைஞனை பழக்கம் பிடித்த மாணவி, இளைஞனுடன் மாணவி காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், அவருடைய நிர்வாண புகைப்படங்களையும் இளைஞனுக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் குறித்த புகைப்படங்களை முகப்புத்தகத்திற்கு வெளியிடுவதாக கூறி அச்சுறுத்திய இளைஞன் மாணவியை, குருநாகல் பகுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here