மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா – நெகிழ்ச்சியில் நெப்போலியன்.. இதோ வீடியோ

0
46

அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட சதை சிதைவு நோயால் அனைத்தையும் விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது, இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது.

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார் .

அவர்களின் திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து பங்கேற்றனர்.

இந்நிலையில், திருமணம் நடந்து முடிந்த நிலையில், தனுஷ் மற்றும் அக்ஷ்யா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட காணொளியில் தனது கணவனை தன் குழந்தை போல் நடத்தும் அக்ஷ்யாவின் நல்ல உள்ளதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் நெகிழ்சியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here