வீதி விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு..!

0
88

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிட்டிகல, மொரகஹஹேன, ஹிக்கடுவ, பதுரலிய மற்றும் கட்டுபொத ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) அதிகாலை பிட்டிகல- எல்பிட்டிய வீதியில் அமுகொட பிரதேசத்தில் பிட்டிகலவிலிருந்து எல்பிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியின் பின்பகுதியில் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அமுகொட, பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று காலை கொழும்பு – ஹொரணை வீதி மொரகஹஹேன கோணபால பகுதியில் ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று கிளை வீதியில் திரும்ப முற்பட்ட போது முன்னால் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி, பின் இருக்கையில் பயணித்த பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய மித்தெனிய, குடகல்ஹார பிரதேசத்தை சேர்ந்தவராவார்.காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், நேற்று பிற்பகல் ஹிக்கடுவை, காலி – கொழும்பு வீதியில் தொடந்துவ பிரதேசத்தில் ஹிக்கடுவையிலிருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பஹல்கெதர, பெரதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 71 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நேற்று மாலை, பதுரலிய – மத்துகம கெலிங்கந்த வீதியின் கொஸ்குலன பிரதேசத்தில், மத்துகமவிலிருந்து கெலிங்கந்த நோக்கிச் சென்ற லங்கம பேருந்தொன்று, முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து புலத்சிங்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 35 வயதுடைய கொஸ்குலான மோல்காவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு, கட்டுபொத, கடஹபொல – ரம்பாவெவ வீதியில் கட்டுமுலுவ பிரதேசத்தில் ரம்பாவெவயிலிருந்து கட்டுபொத நோக்கிச் சென்ற வேன் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கஹவிடிய, பண்டாரகொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here