இந்த கனவை விட்டு விடுங்கள் மிஸ்டர் சீமான் – வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி.!

0
12

‘முதல்வர் கனவை விட்டு விடுங்கள் மிஸ்டர் சீமான்’ என நடிகை விஜயலட்சுமி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது சீமானை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுவிட்டு அமைதியாக இருப்பது விஜயலட்சுமியின் வழக்கம்.

லோக்சபா தேர்தலின் போது விஜயலட்சுமி சென்னை வந்து சீமான் மீது போலீசில் புகார் அளித்து பேட்டி அளித்தார். அப்போது சீமான் விஜயலட்சுமிக்கு பின்னால் திமுக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதன் பின் சில மாதங்களாக அமைதியாக இருந்த விஜயலட்சுமி, தற்போது விஜய்-சீமான் இடையே ஏற்பட்ட உரசல் பின்னணியில் மீண்டும் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். நேற்று வெளியான இரண்டாவது வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் திரும்ப வந்துட்டேன் மிஸ்ர் சீமான்.. எனக்கு அக்கவுண்ட்ல 50 ஆயிரம் போட்டுட்டு கயல்விழிக்கு தெரியக் கூடாது, கட்சி காரர்களுக்கு தெரிய கூடாதுனு சொன்னீங்களே மறந்துட்டீங்களா..

உங்களுக்கு உண்மை பெசும் யோக்யதை கிடையாது.. உன்ன மாதிரி துரோகிகளுக்கிடையே தமிழகம் சிக்காது.. எந்த தமிழ் உணர்வாளர்களும் அதை விட மாட்டார்கள்.. நீங்க முதல்வர் ஆகுற கனவை விட்டு விடுங்கள் மிஸ்டர் சீமான்.. என் கண்ணீர் உங்கள சும்மா விடாது.. என சமீபத்தில் வெளியான வீடியோவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here