வாக்குச் சீட்டைக் கிழித்தவர் கைது..!

0
37

வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வாக்களிப்பதற்காக பொத்துப்பிட்டிய பூஜாராமய விகாரஸ்தானத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முற்பகல் 11 மணியளவில் வந்துள்ளார். வாக்களித்த பின்னர் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் குழு தலைவரின் விருப்பு இலக்கம் ஊழியர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த எண்ணை தெரிவிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டியதால் குறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு கிழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழிந்த வாக்குச் சீட்டு வாக்குச் சாவடி அதிகாரியின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். வாதுவ நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமார தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here