புதுக்குடியிருப்பு பகுதியில் சங்கிலி அறுப்பு..!

0
87

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பான சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிலில் சென்ற குடும்ப பெண்ணின் தங்க சங்கிலி மோட்டார் சைக்கிலில் சென்ற கொள்ளையர்களால் அறுக்க்பபட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

13.11.2024 மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டினை சேர்ந்த குறித்த குடும்ப பெண் தனது மகளை ஏற்றிவர தர்மபுரம் நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் றெட்பான மதுபான சாலைக்கு அருகில் ஒரு உந்துருளியில் வந்த இரண்டு நபர்கள் குறித்த பெண்ணின் களுத்தில் இருந்த தங்கு சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்கள்.

மாலை நேரம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பவுண் நிறைகொண்ட சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்ப பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மோட்டார் சைக்கிலில் வந்த கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் 13.11.2024 நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் உடையார் கட்டு குரவில் பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கையில் உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிலில் பின் தொடர்ந்த இருவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்கள்.

சுமார் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அடுத்தடுத்து இரண்டு சங்கிலி அறுப்பு சம்பவங்கள் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here