நடிகர் Jayam Ravi-யின் விவாகரத்து மனைவியின் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தரப்பு வாதத்தை ஏற்று அவருடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு ஜெயம் ரவிக்கு உத்தரவு பிரப்பித்திருக்கிறார்.
அதன் பிறகு வழக்கின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் எனவும் கூறியிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்னதாக நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியை பிரிவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதைக்கண்டு அதிர்ச்சியான அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவி அறிவிப்பை வெளியிட்ட மறுநாள் தன்னுடைய மறுப்பு அறிவிக்கை வெளியிட்டு இருந்தார்.கணவர் ஜெயம் ரவி தன்னுடன் எந்த ஒரு விஷயத்தையும் கலந்தாலோசிக்கவில்லை. அவராகவே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடும்பொழுது என்னுடன் நிச்சயமாக கலந்தாலோசித்து இருக்க வேண்டும். என்னுடைய அறிவுக்கு வராமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், நடிகர் ஜெயம் ரவி தரப்பிலிருந்து ஆர்த்தியை சந்திப்பதற்கு கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய வீட்டில் நான் மோசமான முறையில் நடத்தப்பட்டேன் என்று பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று விசாரிக்கப்பட்ட இந்த மனு மீது தன்னுடைய மனைவியுடன் கலந்து ஆலோசிக்காமல் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது குறித்து கேள்வி ஜெயம் ரவி அவர்களிடம் எழுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து உங்களுடைய மனைவியுடன் கலந்த ஆலோசியுங்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யுங்கள். அதில் ஏற்படும் உடன்பாட்டின் அடிப்படையில் வழக்கு நடத்தக் கட்டத்தை நகர்த்தலாம் என்ற உத்தரவை ஜெயம் ரவி அவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.