பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெட்ரசோ தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவை பெற்றோசோ தோட்டப் பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய சிறுமியை உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த சிறுமியின் சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.