வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 16.11.24 இன்று உயிரிழந்துள்ளார்.
முல்லை – முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல்ப்பிள்ளை சஞ்சீவ்பிரதீபன் என்ற 45 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முள்ளிவளை பொலீசாரால்எ கடந்த 16.10.24 அன்று கைதுசெய்யப்பட்டு வவுனிறா சிறைச்சாலையில் அடைடக்கப்பட்டுள்ளார்.
இவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணைவைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் 23.10.24 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார், அப்போதும் உறவினர்கள் பார்வையிட்டுள்ளார்கள் அதன் பின்னர் 06.11.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வவுனியா சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட போது அவர் நன்றாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி பிள்ளைகள் அறிந்து அங்கு சென்று பார்வையிட்ட போது அவர் பேச்சு அற்ற நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையின்; தீவிரச சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கைதியினை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது கைதுதொடர்பில் எந்த தகவலும் பொலீசாரால் வீட்டுக்காரர்களுக்கு வழங்கப்படவில்லை இந்த நிலையில் முள்ளியவளை பொலீசாரே ஏற்கனவே குறித்த கைதிமீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா சிறைச்சாலை பொலீசார் குற்றம் சாட்ட முள்ளியவளை பொலீசார் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை விட தீவிர சிகிச்சைப்பிரிவில் உறவினர்கள் மருத்துவரிடம் விசாரித்த போது அவரது மூளை சாவடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். கடந்த ஒருவாரமாக மூளைவாவடைந்த நிலையில் குறித்த கைதி இன்று (16) உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கோட்டு வவுனியாவில் உள்ள மனித உரிமைகள்ஆணைக்குழுவிடம் கடந்த 13 ஆம் திகதி சென்றபோது அவர்கள் 18ஆம் திகதி திங்கட் கிழமைதான் முறைப்பாடு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ள நிலையில் குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.
இந்த கைதியின் உயிரிழப்பு குறித்து மனைவி பிள்ளைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள் சிறைச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவரின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்.