கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Wuxi நகரில் உள்ள Wuxi Yixing தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சீன நேரப்படி நேற்று மாலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.