பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்.. யார் யார்ன்னு தெரியுமா..!

0
26

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் விசேட ஆளுமை மற்றும் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தின் மீது அதீத ஆசை கொண்டவர்களாகவும், பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி பணத்தின் மீது தீராத மோகம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் பணம் சம்பாதிப்பதற்காக கடினமான உழைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த வாழ்க்கை குறித்து அதிகமாக கற்பனை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் அந்த வாழ்வை நிஜத்தில் அடைவதற்கு எந்த எல்லைக்கும் சென்று போராட கூடிய ஆற்றல் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாவே உயர் பதிவியின் மீதும் சுகபோக வாழ்க்கையின் மீதும் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த நிதி நிலையை அடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கும் குணத்தை கொண்டிருக்கும் இவர்கள் பணத்திற்காக எந்த போராட்டத்தையும் சந்திக்க தயாராக இருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் புதனும், குருவும் இணைந்திருப்பதால், சிலருக்கு முயற்சியாலும், சிலருக்கு முயற்சி இல்லாமலும் தலைமைப்பதவிகள் கிடைக்கும். இந்த ராசியினர் மற்றவர்களை அடக்கி ஆளுவதில் வல்லவர்களாக இருப்பாரடகள். இவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் மற்றவர்களை விடவும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் வாழ்வில் நிறந்த பொருளாதார நிலையை அடைய இவர்களை ஊக்குவிப்பதாக அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Mullaibbc தளம் இதற்கு பொறுப்பேற்காது).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here